வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (21.11.2025 - 27.11.2025)ரிஷபம்: சனிஸ்வர பகவானை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: உங்கள் கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இட மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். ஒருசிலர் வெளியூரில் குடியேறுவீர். சனி ஞாயிறில் புதிய முயற்சி வேண்டாம்.ரோகிணி: புதனால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் விலகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். ஞாயிறு திங்களில் திட்டமிட்ட வேலை நடக்கும்.மிருகசீரிடம் 1,2: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். நட்புகளால் லாபம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திங்கள் செவ்வாயில் சிந்தித்து செயல்படுவது நல்லதுசந்திராஷ்டமம்: 22.11.2025 மாலை 4:47 மணி - 25.11.2025 அதிகாலை 3:01 மணி