வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (26.12.2025 – 1.1.2026)ரிஷபம்: வீரராகவப் பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளில் அதிகபட்ச அக்கறை தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலும் வேலைபளுவும் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையும் பாதிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.ரோகிணி: உங்கள் தன குடும்பாதிபதி சாதகமாக சஞ்சரிப்பதால் இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: அஷ்டம ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய், புதன், சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் எடுத்த வேலைகளை முடிப்பீர். பொன் பொருள் பூமி வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். மற்றவர் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் உங்கள் முன்னேற்றம் இருக்கும்.