/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)ரிஷபம்: நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் வேலைகளை வெற்றியாக்குவார். பெரிய மனிதர்கள் ஆதரவு, தெய்வ அருளும் கிடைக்கும். திட்டமிட்ட வேலையில் லாபம் உண்டாகும்.ரோகிணி: ராசிநாதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு கையில் பணம் புரளும். வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் தேவை. தொழிலில் முதலீடு செய்பவர்கள் நன்றாக யோசிக்க வேண்டும். அரசு ஒப்பந்தங்களில் திடீர் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.