/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (30.1.2026 - 5.2.2026)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 2,3,4: பாக்ய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பெரியோர் ஆதரவு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு அதிகமாகும். சுக்கிர பகவான் செல்வத்தையும் செல்வாக்கையும் அதிகரிப்பார். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும்.ரோகிணி: நினைத்ததை சாதிக்கும் வகையில் நிலை மாறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன் அடையும். குடும்பத்தில் நெருக்கடி குறையும். மிருகசீரிடம் 1,2: சூரியன், செவ்வாயின் சாதக நிலையால் எதிர்கொண்டு வெற்றிபெறக்கூடிய நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும்.