உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: எடுக்கும் வேலை சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.ரோகிணி: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வெளிநாட்டிற்கு செல்ல எடுக்கும் முயற்சி பலிக்கும்.மிருகசீரிடம் 1,2: ஒவ்வொரு வேலையிலும் நிதானம் தேவை. பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் நன்றாக யோசிக்க வேண்டும். புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் அரசு ஒப்பந்தங்களில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டிங் ஏற்ற இறக்கமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !