வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 2,3,4: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொடர்ந்து முயற்சி செய்தும் கிடைக்காமல் இருந்த இடமாற்றம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். செலவு அதிகரிக்கும்.ரோகிணி: நினைத்ததை சாதிக்கும் வகையில் உங்கள் நிலை உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்கள் அடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றிபெறக்கூடிய நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையுன் ஏற்பட்ட சச்சரவுகள் இருந்த இடம் தெரியாமல் போகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.