வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )ரிஷபம்: பர்வதவர்த்தினியை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: ஜீவன ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் வேலை, அதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். புதன் வியாழன் அன்று உங்கள் வேலைகளில் கவனம் தேவை.ரோகிணி: சனி பகவானால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: செவ்வாய், ராகு, சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: 11.3.2026 இரவு 9:50 மணி - 14.3.2026 காலை 8:45 மணி