/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (13.3.2026 - 19.3.2026)ரிஷபம்: சங்கர நாராயணரை வழிபட வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நிதிநிலை உயரும் வாரம் இது. ரோகிணி: நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்ட பணம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: வேலைகளில் வெற்றி உண்டாகும். உடன் இருப்போர் உங்களுக்கு உதவியாக இருப்பர். குடும்ப நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். புதிய முயற்சிகள் லாபம் தரும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 11.3.2026 இரவு 9:50 மணி - 14.3.2026 காலை 8:45 மணி