உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: அரசுவழி முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பணப்புழக்கம் இருக்கும்.ரோகிணி: குரு பகவானால் பணப்புழக்கம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும். இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். உடல்நிலை சீராகும்.மிருகசீரிடம் 1,2: குரு பார்வையுடன் சஞ்சரிக்கும் செவ்வாயால் உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடியும். வியாபாரம் லாபம் தரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தேர்தலில் சிலர் போட்டியிடுவர். புதிய இடம். வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !