வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: லாப ஸ்தான சூரியனால் வரவு அதிகரிக்கும், செல்வாக்கு உயரும், எடுக்கும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு உயரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். புதன் கிழமை உங்கள் வேலைகளில் கவனம் தேவை.ரோகிணி: லாப ஸ்தானம் பலம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த பண நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: குடும்ப ஸ்தானத்தில் குரு, ஜீவன ஸ்தானத்திற்கு குருப்பார்வை, லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழில் லாபம் தரும். அரசுவழி வேலை சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.சந்திராஷ்டமம்: 8.4.2026 அதிகாலை 4:56 மணி - 10.4.2026 மதியம் 3:58 மணி