உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

 வார பலன் (10.4.2026 - 16.4.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: வாரத்தின் முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும், வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.ரோகிணி: லாப சனியால் உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும், வேலை மீதிருந்த பயம் போகும், உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி அடையும்.மிருகசீரிடம் 1,2: லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடன் இருப்போர் உங்களுக்கு உதவியாக இருப்பர். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். புதிய முயற்சிகள் லாபம் தரும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 8.4.2026 அதிகாலை 4:56 மணி - 10.4.2026 மதியம் 3:58 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !