/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (17.4.2026 - 23.4.2026)ரிஷபம்: வீரராகவ பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: விரயத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலர் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அரசியல் வாதிகளுக்கு ஓய்விற்கு நேரமில்லாத நிலையும் உடல்நிலையில் சங்கடமும் தோன்றும்.ரோகிணி: லாப ஸ்தான சனி, செவ்வாய், புதனால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வேலை மீதிருந்த பயம் போகும். வரவேண்டிய பணம் வரும். மனக் குழப்பம் விலகும்.மிருகசீரிடம் 1,2: சுக்கிரன், செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு இருந்த போராட்ட நிலை மாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என வாங்க முடியும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம் கூடும். புதிய முயற்சி லாபம் தரும்.