உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: குரு பார்வை உண்டாவதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.ரோகிணி: லாப சனி, செவ்வாயால் உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு வேலை நிரந்தரமாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும், சிலருக்கு புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: செவ்வாய் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பொன் பொருள் சேரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !