உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (1.5.2026 - 7.5.2026)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: குரு பார்வையால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதியின் செல்வாக்கு உயரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். பொன் பொருள் சேரும். செவ்வாய் அன்று  நிதானம் காப்பது நல்லதுரோகிணி: சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். பணப்புழக்கம் இருக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதன் அன்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: செவ்வாய், சனி, சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் நிலை உயரும். நினைத்ததை சாதிப்பீர். நஷ்டத்தில் இயங்கியத் தொழில் லாபம் தரும். உழைப்பாளர்களுக்கு வருமானம் உயரும். பொன் பொருள் சேரும், வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம்: 5.5.2026 மதியம் 12:05 மணி - 7.5.2026 இரவு 11:07 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !