வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)ரிஷபம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரித்து வீண் செலவு, வேலையில் நெருக்கடி, உடல் நிலையில் பின்னடைவு ஏற்படும். குருவின் பார்வையால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.ரோகிணி: ராசிநாதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம், தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.மிருகசீரிடம் 1,2: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். நினைத்ததை சாதிக்க முடியும். உழைப்பாளருக்கு வருமானம் உயரும். பொன் பொருள் சேரும், வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.