/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)ரிஷபம்: சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: உங்களுக்குள் உற்சாகம் இருக்கும். எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள். எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு ஓய்வற்ற நிலை இருக்கும்.ரோகிணி: எடுத்த வேலைகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வேலை மீதிருந்த பயம் போகும். வரவேண்டிய பணம்வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.மிருகசீரிடம் 1,2: இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும். குடும்பம் மற்றும் தொழிலில் இருந்த போராட்டநிலை மாறும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம்கூடும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.