வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். எடுத்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீண் செலவும் அலைச்சலும் குறையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்.ரோகிணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் பண வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எடுத்த வேலை வெற்றியாகும். ஐடி நிறுவனங்களில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செவ்வாய் புதன் அன்று நிதானமாக செயல்படுவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் இடம், வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சி வெற்றியாகும். சுயதொழில் செய்வோருக்கு வருமானம்கூடும். புதன் வியாழன் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 1.6.2026 இரவு 7:21 மணி - 4.6.2026 காலை 6:42 மணி