/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )ரிஷபம்: நரசிம்மரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.கார்த்திகை 2,3,4: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு துணிச்சலாக செயல்படக் கூடிய நிலை உண்டாகும். உழைப்பின் வழியே லாபம் கூடும். எடுத்த வேலை முடியும்.ரோகிணி: செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் சொந்த வீடு, வாகனம் வாங்குவீர். கடன்களை அடைக்கும் அளவிற்கு பணம் வரும்.மிருகசீரிடம் 1,2: திருமண வயதினருக்கு வரன் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். விவாகரத்து வரை சென்றவர்களும் நிலை மாறும். கூட்டுத்தொழில் லாபம் தரும். கையில் பணம் புரளும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.