உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)ரிஷபம்: வீரராகவ பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: இரண்டாமிடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் மனக் குழப்பம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரோகிணி: தொழில் முன்னேற்றம் அடையும். பெரிய நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு தொழிலாளர் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருப்போருக்கு மனநிம்மதி உண்டாகும். சிலர் பார்க்கும் வேலையை விட்டு விட்டு தகுதிக்குரிய வேலையில் அமருவீர்.மிருகசீரிடம் 1,2: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.  திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கையில் பணம் புரளும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !