வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (7.8.2026 - 13.8.2026)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். செய்து வரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.ரோகிணி: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தையும் வாடிக்கையாளர் தேவையையும் அறிந்து முதலீடு செய்வது நல்லது. சிலர் சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். உடன் பணிபுரிவோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். கூட்டுத்தொழில் லாபம் தரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.