உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 2,3,4:சூரிய பகவானால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.ரோகிணி: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். சிலருக்கு புதிய வாகனம், சொத்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வர வேண்டிய பணம் வரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படலாம். அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வார்த்தையில் நிதானம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !