வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (18.9.2026 - 24.9.2026)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: சங்கடம் விலகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல்நிலையில் சங்கடம் தோன்றி மறையும். சனிக்கிழமை அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.ரோகிணி: சுக்கிரனும், ராகுவும் தொழிலில் அக்கறை செலுத்த வைப்பார். சிலருக்கு மனத்தில் சங்கடம் ஏற்படும். சிலர் அவதுாறுக்கு ஆட்படலாம். ஞாயிறு அன்று அமைதி காப்பது அவசியம்.குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.மிருகசீரிடம் 1,2: ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 19.9.2026 அதிகாலை 12:21 மணி - 21.9.2026 காலை 11:58 மணி