வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (2.10.2026 - 8.10.2026)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். செய்து வரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வேலைபளுவின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பும் மருத்துவ செலவும் ஏற்படும்.ரோகிணி: ஓய்வு எடுக்க முடியாத அளவிற்கு உழைப்பு அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றி மறையும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தையும் வாடிக்கையாளர் தேவையையும் அறிந்து செயல்படுவது அவசியம்.மிருகசீரிடம் 1,2: செவ்வாய் நீச்சம் அடைந்தாலும், உச்ச குருவால் கையில் பணம் புரளும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். உடன் ஆதரவு கிடைக்கும்.