உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன்(23.10.2026 - 29.10.2026)ரிஷபம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியையும், உடன் பணிபுரிபவர்களையும் அனுசரித்துச் செல்வது அவசியம். உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பது நன்மை தரும்.ரோகிணி: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். வீண் செலவு கட்டுப்படும். வியாபாரத்தில் லாபம் கூடும். மறைமுக எதிர்ப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். மிருகசீரிடம் 1,2: உங்களுக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலையை முடித்து லாபம் அடைவீர். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.  எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !