உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)ரிஷபம்: சுப்ரமணியரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4:சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உடல்நிலை சீராகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.ரோகிணி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில் சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் அவசர வேலை வந்து சங்கடப்படுத்தும். சிலருக்கு வீண் செலவு ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். திங்கள் அன்று  திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மிருகசீரிடம் 1,2: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை வேகப்படுத்துவார். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாவீர். வேலைப்பார்க்கும் இடத்திலும் பதட்டமும் பயமும் இருக்கும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. செவ்வாய் அன்று  வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 26.7.2026 காலை 10:05 மணி - 28.7.2026 இரவு 9:35 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !