/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (27.6.2025 - 3.7.2025)சிம்மம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் நீங்கும்.மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, செவ்வாய் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனை மேலோங்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி வெற்றியாகும்.பூரம்: சுக்கிர பகவான் ஞாயிறு அன்று காலை வரை யோகப்பலன்களை வழங்குவார். வருமானம் அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.உத்திரம் 1: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால், தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.