வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (8.8.2025 - 14.8.2025)சிம்மம்: வைத்திய நாதரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் நெருக்கடி அதிகரிக்கும். லாப குருவால் மதிப்பு அதிகரிக்கும். வருமானம் பெருகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செவ்வாய் புதனில் பொறுமை காப்பது நல்லது.பூரம்: லாப சுக்கிரன் நிம்மதியை உண்டாக்குவார். வீண் செலவு குறையும். உடல்நிலை சீராகும். நினைப்பது நடக்கும். வருமானம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: விரய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். அவை யாவும் சுபச்செலவாகவே இருக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு என்று வாங்குவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். வியாழன் அன்று வேலைகளில் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 12.8.2025 காலை 8:36 மணி - 14.8.2025 காலை 11:37 மணி