வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் 3.10.2025 - 9.10.2025சிம்மம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிக்குள் கேதுவுடன் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். திங்கள் அன்று பொறுமை காப்பது நல்லது.பூரம்: ராசிக்குள் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு, சகாய ஸ்தானத்தில் செவ்வாய் என்று உங்கள் நிலையை உயர்த்துவார்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். நினைப்பது நடக்கும். செவ்வாய் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.உத்திரம் 1: குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணையின் முயற்சி வெற்றியாகும். தந்தைவழி உறவுகளால் மனம் சங்கடப்படும். உங்கள் வார்த்தை கோபமாக வெளிப்படும். செவ்வாய் புதன் அன்று வேலைகளில் பொறுமை தேவை.சந்திராஷ்டமம்: 6.10.2025 அதிகாலை 12:25 மணி - 8.10.2025 அதிகாலை 3:41 மணி