/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (10.10.2025 - 16.10.2025)சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.மகம்: கேது மனக்குழப்பத்தையும் போராட்டங்களையும் உண்டாக்குவார். மூன்றாமிட செவ்வாய் உங்களைப் பாதுகாப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். சகோதரர்கள் வழியில் நன்மைகளை உண்டாக்குவார்.பூரம்: உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ரெட்டிப்பு சந்தோஷம் அதிகரிக்கும். உத்திரம் 1: வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. விரய குருவின் பார்வைகளால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நெருக்கடி நீங்கும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகும்.