உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )சிம்மம்: மணக்குள விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிக்குள் கேது சப்தம ஸ்தானத்தில் ராகு, விரய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வரவு செலவில் கவனம் தேவை. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் சூழ்நிலை அறிந்து செயல்படவும். ஞாயிறு திங்களில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.பூரம்: சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரத்தில் லாபம் கூடும். கையில் பணம் புழங்கும். நினைப்பது நடக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும். பொன் பொருள் சேரும்.  திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திரம் 1: மூன்றாமிட சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தடைபட்ட வேலை நடக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். குரு பார்வைகளால் எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். வழக்கில் வெற்றி உண்டாகும். வேலைகளில் பொறுமை தேவை.சந்திராஷ்டமம்: 2.11.2025 காலை 8:20 மணி - 4.11.2025 காலை 11:44 மணி. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !