உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)சிம்மம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: கேது உங்கள் வேலைகளில் குழப்பம், போராட்டங்களை உண்டாக்குவார். பாக்யாதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த செயல் நடக்கும்.பூரம்: சுக்கிர பகவான் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.உத்திரம் 1: சூரியனால் தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த இடமாற்றம் கிடைக்கும். விரய குருவின் பார்வைகளால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !