வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (26.12.2025 – 1.1.2026)சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடங்கள் விலகும்.மகம்: உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். அந்நியரால் கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒருவரை ஒருவர் அனுசரித்துச்செல்வது அவசியம். புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.பூரம்: ஐந்தாமிட சுக்கிரனால் பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவுகள் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். கையில் பணம் புழங்கும். ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.உத்திரம் 1: ராசியாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வலிமை கூடும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசுவழி வேலைகள் சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திங்கள்கிழமை அதிகாலைவரை அனைத்திலும் பொறுமை தேவை.சந்திராஷ்டமம்: 27.12.2025 அதிகாலை 12:21 மணி - 29.12.2025 அதிகாலை 4:06 மணி