வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)சிம்மம்: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட செல்வாக்கு உயரும்.மகம்: உங்களுக்கு மிக யோகமான வாரம். நெருக்கடி நீங்கி நிம்மதி உண்டாகும். உழைப்பிற்கேற்ற லாபம் ஏற்படும். உடல், மன நிலையிலும் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.பூரம்: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். கையில் பணம் புழங்கும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திரம் 1: ராசியாதிபதி சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். சகிப்புத்தன்மையோடு செயல்பட்டவர்கள் செல்வாக்கோடு வலம் வருவர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். ஞாயிற்றுக்கிழமை பொறுமை அவசியம்.சந்திராஷ்டமம்: 23.1.2026 காலை 8:23 மணி - 25.1.2026 மதியம் 12:16 மணி