உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: முன்னேற்றமான வாரம் இது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. எதிர்ப்பு, போட்டி என ஏற்பட வாய்ப்பிருப்பதால் புதிய முயற்சியில் நிதானம் தேவை.பூரம்: சுக்கிரன், ராகு சனி புதனுடன் இணைவதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. உங்கள் வேலைகளில் கவனக்குறைவு, தடை ஏற்படும். அலட்சியத்திற்கும் ஆசைக்கும் இடம் கொடுக்க வேண்டாம். பண விவகாரத்தில் கவனம் தேவை.உத்திரம் 1: உங்கள் ராசியாதிபதியால் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசு வழி வேலை சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !