/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டிய வாரமிது. சனிபகவானால் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். இதுவரை நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும்.பூரம்: சப்தம ஸ்தானத்தில் ராகு செவ்வாய் சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நல்லது. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும், தொழில் கூட்டாளிகளின் ஆலோசனை மதிப்பளிப்பதும் நன்மையாகும். பண விவகாரத்தில் கவனம் தேவை.உத்திரம் 1: உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.