/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (27.3.2026 - 2.4.2026)சிம்மம்: அஷ்ட பைரவரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில், ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும்.பூரம்: இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் தேடி வருவர். நவீன பொருள் வாங்குவீர்.உத்திரம் 1: அஷ்டம சனி அஸ்தமனம் அடைந்திருப்பதால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும் ராசிநாதன் மறைவு பெற்றிருப்பதால் மனம் குழப்பம் அடையும். எந்தவொரு வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத அளவிற்கு சூழ்நிலை எதிராக மாறும்.