உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)சிம்மம்: சனீச்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.மகம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது சங்கடங்களைக் கொடுத்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் அவருடைய பார்வைகளும் உங்களைப் பாதுகாக்கும். பண வரவு அதிகரிக்கும், பெரியோரின் ஆதரவு கிடைக்கும், தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.பூரம்: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சிக்கல் விலகும். தவறானவர்கள் உங்களை விட்டு விலகுவர்.உத்திரம் 1: ராசிநாதன் சூரியன் பாக்ய ஸ்தானத்தில் உச்சமடைவதால் உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வெளிச்சம் வந்தது போல் வாழ்க்கை பிரகாசமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வெள்ளிக்கிழமை வேலைகளில் நிதானம் அவசியம்.சந்திராஷ்டமம்: 15.4.2026 காலை 7:42 மணி - 17.4.2026 மதியம் 12:06 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !