உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)சிம்மம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: கேதுவும், சனியும் சங்கடங்களைக் கொடுத்தாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களைப் பாதுகாப்பார். பண வரவு அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.பூரம்: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலை உயரும்.உத்திரம் 1: ராசிநாதன் சூரியன் வெள்ளி அன்று முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் வாழ்க்கை மாறும். அரசியல்வாதி செல்வாக்கு மீண்டும் உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !