உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: விரய குருவின் பார்வை அஷ்டம சனிக்கு கிடைப்பதால் உங்களுக்கேற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். செவ்வாய்க்கிழமை நிதானமாக செயல்படுவது அவசியம்.பூரம்: இதுவரை இருந்த பிரச்னை முடியும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால்  பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். புதன்கிழமை அனைத்திலும் பொறுமை அவசியம்.உத்திரம் 1: அரசுவழி முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 8.6.2026 இரவு 11:24 மணி - 11.6.2026 அதிகாலை 4:16 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !