உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)சிம்மம்: சட்டநாதரை வழிபட சங்கடம் விலகும்.மகம்: அஷ்டம சனியால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். குரு பார்வை போட்டி, பிரச்னை, வம்பு, வழக்கு என்றவற்றை இல்லாமல் செய்யும். ஆரோக்கியம் சீராகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.பூரம்: சுக்கிரன் வருமானத்தை அதிகரிப்பார். வசதி வாய்ப்புகள் உண்டாக்கும். பணப் புழக்கத்தை அதிகரிப்பார். தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு நிலையை உயரும். செவ்வாய் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.உத்திரம் 1: அரசு வழி வேலை சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதன் அன்று பொறுமை தேவை.சந்திராஷ்டமம்: 6.7.2026 காலை 7:24 மணி - 8.7.2026 மதியம் 12:25 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !