உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)சிம்மம்: சூரியனை வழிபட்டு தொடங்கும் வேலை வெற்றியாகும்.மகம்: சனிபகவானால் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  உடல்நிலை சீராகும், தடைபட்ட வேலை நடக்கும். வேலையில் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு  சாதகமாகும். சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்.பூரம்: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலர் புதிய வாகனம், வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்.உத்திரம் 1: அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். சிலர் வெளிநாட்டிற்கு சென்று வருவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !