வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் (14.8.2026 - 20.8.2026)சிம்மம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட சங்கடம் விலகும்.மகம்:எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. சிலர் உங்களை விட்டு விலக வாய்ப்பிருப்பதால் உங்களை மட்டுமே நீங்கள் நம்புங்கள்.பூரம்: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்.உத்திரம் 1: செவ்வாய் முதல் ராசிநாதன் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். அரசு பணியாளருக்கு விரும்பிய இட மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தேவைக்கேற்ற பணம் வரும்.