உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)சிம்மம்:அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.மகம்:உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் விலகும். அஷ்டம சனியின் பாதிப்பில் மாற்றம் ஏற்படும். போட்டி, பிரச்சனை, வம்பு, வழக்குகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். சனி ஞாயிறில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.பூரம்:உங்கள் சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும். நவீன பொருட்கள் சேரும். வியாபாரம் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஞாயிறு திங்களில் அனைத்திலும் பொறுமை அவசியம்.உத்திரம் 1:ராசிநாதன் சூரியன் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். சூழ்நிலையின் காரணமாக சோர்ந்திருந்தவர்கள் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். லாப செவ்வாயால் சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலைவரை பொறுமையாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 29.8.2026 இரவு 10:59 மணி - 1.9.2026 அதிகாலை 4:27 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !