வார ராசிபலன்
வார ராசிபலன் சிம்மம்
வார பலன் ( 11.9.2026 - 17.9.2026 )சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.மகம்: மனம் குழப்பமடையும். எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் நேரடி கவனம் செலுத்துவது நன்மை அளிக்கும். சிலர் புதிய இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.பூரம்: உங்களுக்கிருந்த சங்கடம் நெருக்கடி நீங்கும். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பொன் பொருள் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திரம் 1: ராசிநாதன் சூரியன் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தேவைக்கேற்ற பணம் வரும்.