உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (13.11.2026 - 19.11.2026)சிம்மம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.மகம்: உங்கள் வாழ்க்கையை சோதனைக்குள்ளாக்கிய கேது ராசியை விட்டு விலகி இருப்பதும், ஆறாமிடமான ருண ரோக சத்துரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதும் இதுவரை உங்களுக்கிருந்த பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் இல்லாமல் செய்யும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும்.பூரம்: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், அதிசார குருவின் பார்வைகள் 5, 7, 9 ம் இடங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். சிலருக்கு சொந்த இடம், வீடு என்ற கனவு நனவாகும்.உத்திரம் 1: உங்கள் ராசி நாதன் சூரியன் செவ்வாய்க்கிழமை முதல் கேந்திர பலம் பெறுவதால் தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் லாபம் தரும். பார்த்துவரும் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !