உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் சிம்மம்

வார பலன் (20.11.2026 - 26.11.2026)சிம்மம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.மகம்:ராசியை விட்டு கேது விலகி விட்டதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். உடன் இருந்தவர்களின் சுயரூபம் தெரியவரும். குடும்பத்திலும் தொழிலிலும் குழப்பத்தை உண்டாக்கி வந்தவர்கள் விலகிச்செல்வர். வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் கூடும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.பூரம்:உங்கள் சகாய ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். ஆறாமிட ராகுவால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வம்பு வழக்கு முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும் சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும்.உத்திரம் 1:ராசிநாதன் சூரியன் கேந்திர பலம் பெறுவதால் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.நினைத்ததை சாதிப்பீர்கள். ராசிக்குள் குரு சஞ்சரிப்பதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். உறவினர் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். திருமண வயதினருக்கு வரன்வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சனி ஞாயிறில் பொறுமையாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 19.11.2026 இரவு 9:41 மணி - 22.11.2026 அதிகாலை 3:54 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !