உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)தனுசு: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்:எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் அவருடைய பார்வைகளால் வீண் செலவும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல்நிலை சீராகும்.பூராடம்:வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொன் பொருள் சேரும். சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலையை முடித்திடக்கூடிய நிலை உருவாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும்.உத்திராடம் 1:சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலை சீராகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !