/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)தனுசு: வியாழக்கிழமையில் குருவிற்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும், பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேறும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாழக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.பூராடம்: ராசி நாதன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலை நடக்கும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். பொன் பொருள் சேரும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: சூரிய பகவானால் உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நேர்மையாக செயல்படுவது நல்லது. மூன்றாமிட ராகுவால் எடுத்த செயல் வெற்றியாகும்.சந்திராஷ்டமம்: 24.7.2025 மதியம் 12:22 மணி - 26.7.2025 மாலை 6:13 மணி