உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் தனுசு

வார பலன்  12.9.2025 - 18.9.2025தனுசு: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: பாக்ய ஸ்தானத்தில் கேது, சூரியன் சஞ்சரித்து முயற்சிக்கேற்ற ஆதாயத்தை வழங்கி வந்தாலும், புதன் முதல் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதன், வியாழனில் அனைத்திலும் நிதானம் தேவை.பூராடம்: ராசி நாதன் குரு 7ல் சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் சங்கடம் விலகும். நினைத்தது நடந்தேறும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். பொன், பொருள் சேரும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படவும். உத்திராடம் 1: குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் சாதகமாக இருப்பதால் நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: 17.9.2025 அதிகாலை 4:08 மணி – 19.9.2025 காலை 9:32 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !