/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் தனுசு
வார பலன் (26.9.2025 - 2.10.2025)தனுசு: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.மூலம்: கேதுவுடன் சுக்கிரன் இணைந்து இருப்பதால் நேற்றைய முயற்சி வெற்றியாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை உயரும். பெரிய மனிதர்கள் தொடர்பால் வேலை நடக்கும். மூன்றாமிட ராகு வேலைகளை வெற்றியாக்குவார்.பூராடம்: சுக்கிரன் இந்த வாரத்தை உங்களுக்கு அதிர்ஷ்ட வாரமாக்குவார். குரு பகவான் உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வேலைக்காக மேற்கொண்ட முயற்சியை வெற்றியாகும்.உத்திராடம் 1: சூரியனும், புதனும் வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். எதிர்பார்த்த இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம் தரும். வருமானமும், செல்வாக்கும் உயரும்.